மேட்டூர் அணையின் நீர்மட்டம் நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மாலை 4.00 மணி நிலவரப்படி 79.98 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,689 கன அடியிலிருந்து 8,583 கன அடியாகக் குறைந்துள்ளது.
தற்போது அணையில் 41.93 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
