ETN News சமீபத்திய அப்டேட்கள்
Salem · regional

சேலம் அருகே கார் தீப்பிடித்து எரிந்தது

சேலம் அருகே கார் தீப்பிடித்து எரிந்தது

சேலம் இளம்பிள்ளையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் காரில் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது நெய்க்காரப்பட்டி பகுதியில் சென்றபோது, கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காரில் பற்றிய தீயை முழுமையாக அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, காரில் பயணம் செய்த 3 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

← மேலும் மாவட்ட செய்திகள்