வாழப்பாடி-பேளூர் சாலையில் பள்ளம்: விபத்து அபாயம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி-பேளூர் சாலையில், பாட்டப்பன் கோவில் அருகே சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
இந்த ஆபத்தான பள்ளத்தை நெடுஞ்சாலைத் துறை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என பாமக நிர்வாகி உழவன் ஆர்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
