மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்ட உள்ளிருப்புப் போராட்டம் பேச்சுவார்த்தைக்குப் பின் வாபஸ் பெறப்பட்டது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தொழிலாளர் அமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
அமைச்சர் அளித்த உறுதியைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்று பணிக்குத் திரும்பினர். போராட்டத்தின்போது பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் வந்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
