ETN News சமீபத்திய அப்டேட்கள்
Salem · regional

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா

சேலம் மாவட்டம் சதாசிவபுரம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக விவசாய நிலங்களுக்குச் செல்லப் பயன்படுத்தப்பட்ட பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், விளைபொருட்களைக் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, விவசாயப் பாதையை மீட்டுத்தர வேண்டும் என அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

← மேலும் மாவட்ட செய்திகள்