ETN News சமீபத்திய அப்டேட்கள்
Salem · crime

பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்க முயன்றவர் கைது

சேலத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்ய முயன்றவரை வீராணம் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 230 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்க முயன்றவர் கைது

சேலத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்ய முயன்ற ஒருவரை வீராணம் போலீஸார் கைது செய்தனர். காவல் ஆய்வாளர் அம்பிகா தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுககம்பட்டி அரசுப் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை மடக்கி சோதனை செய்தனர்.

சோதனையில் அவர்களிடம் 230 கிலோ ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிக்கின. போலீஸாரின் விசாரணையில், பிடிபட்டவர் கரியக்கோயில் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (37) என்பது தெரியவந்தது. அவரோடு இருந்த மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடியவர் வடமாநிலத்தைச் சேர்ந்த உஜ்வீர் சிங் என்பதும், அவர் மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்ய முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, ஜெயராஜை கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்