தேவகோட்டையில் கோட்டையம்மன் ஆடி புள்ளி பொங்கல் திருவிழா
தேவகோட்டையில் கோட்டையம்மன் ஆடி புள்ளி பொங்கல் திருவிழா தொடங்கியது, இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கோட்டையம்மன் கோயில் ஆடி புள்ளி பொங்கல் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
ஆண்டுதோறும் நகரத்தார் சார்பில் விமரிசையாக நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 2-ம் தேதி பொங்கல் விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
