சிவகங்கை: குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்களின் முறையீடு
சிவகங்கையில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு முறையிட்டனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் ஊராட்சி, சாத்தமங்கலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறு பழுதடைந்துள்ளதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த கிராமத்து பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர், தங்களின் குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
