திருப்பத்தூர் தேர்தல் வழக்கிலிருந்து வாபஸ்: கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
திருப்பத்தூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் தொகுதி தேர்தல் வழக்கில், தவெக வேட்பாளர் சேதுபதி வெற்றிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
தற்போது அந்த வழக்கிலிருந்து வாபஸ் பெறுவதாக கே.ஆர்.பெரியகருப்பன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை ஏற்றுக்கொண்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
