தென்காசி: சாயப்பட்டறைகள் சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் சாயப்பட்டறைகள் சீல் வைக்கப்பட்டதால் வேலை இழந்த விசைத்தறி தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதற்கிடையில், தென்காசியில் விதிமுறைகளை மீறியதாகக் கூறி அமைச்சர் ராஜீவ் ஆய்வுக்குப் பின் 19 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதனால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
