ETN News சமீபத்திய அப்டேட்கள்
Kadayanallur · crime

பேருந்தில் நகை திருடிய பெண் கைது

பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 9 பவுன் நகையைத் திருடிய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா என்பவரை கடையநல்லூர் போலீஸார் கைது செய்தனர்.

பேருந்தில் நகை திருடிய பெண் கைது

தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியைச் சேர்ந்த தீபா என்பவர், அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது தனது 9 பவுன் நகை திருடுபோனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கடையநல்லூர் போலீஸார் பேருந்து நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா (34) என்பவர் நகையைத் திருடியது உறுதி செய்யப்பட்டது. அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து நகையை மீட்டனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்