தென்காசியில் புகையிலை கடத்திய 3 பேர் கைது
தென்காசியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய 3 பேரை பாவூர்சத்திரம் போலீஸார் கைது செய்து, 70 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. குருவன்கோட்டையைச் சேர்ந்த குமார் (39), மருதப்புரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (52), கரும்பனூரைச் சேர்ந்த பிரபாகரன் (38) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 70 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
