லஞ்சம் வாங்கிய வயர்மேன் கைது
புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட மின்வாரிய வயர்மேன் தென்காசியில் கைது செய்யப்பட்டார்.

தென்காசி அருகே உள்ள புன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். தனது புதிய வீட்டுக்கு மின் இணைப்பு கோரி அவர் விண்ணப்பித்திருந்தார். இதற்காக மின்வாரிய அலுவலகத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் செலுத்தப்பட்ட நிலையில், வயர்மேன் ஆறுமுகச்சாமி (53) கூடுதலாக ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து நாகராஜன் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். லஞ்சம் வாங்கியபோது அதிகாரிகளால் ஆறுமுகச்சாமி கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
