ETN News சமீபத்திய அப்டேட்கள்
Tenkasi · government

தென்காசியில் உலக மக்கள்தொகை தின உறுதிமொழி ஏற்பு

தென்காசியில் உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசியில் உலக மக்கள்தொகை தின உறுதிமொழி ஏற்பு

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, மக்கள்தொகை விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கத்தையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட பேரணியையும் ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்