ETN News சமீபத்திய அப்டேட்கள்
Kadayam · environment

கடையம் அருகே சாலையோரம் மூட்டை மூட்டையாகக் கழிவுகள்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சாலையோரம் மூட்டை மூட்டையாகக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடையம் அருகே சாலையோரம் மூட்டை மூட்டையாகக் கழிவுகள்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கீழக்கடையம் பகுதியில் சாலையோரம் மூட்டை மூட்டையாகக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

லாரிகளில் கொண்டுவரப்பட்டுச் சாலையோரங்களில் கழிவுகளைக் கொட்டும் சம்பவங்கள் தொடர்வதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்