போடியில் தரம் குறைவான எண்ணெய் பறிமுதல்
போடியில் செக்கு எண்ணெய் என்ற பெயரில் தரம் குறைந்த எண்ணெய்களை விற்பனை செய்த கடைக்காரர்களிடமிருந்து உணவு பாதுகாப்புத் துறையினர் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

போடி பகுதியில் செக்கு எண்ணெய் என்ற பெயரில் தரம் குறைவான எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது.
அதன்பேரில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி, லேபிள்கள் இல்லாத மற்றும் தரம் குறைந்த எண்ணெய் டின்னுகளைப் பறிமுதல் செய்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
