தேனியில் சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி
தேனி கனரா வங்கி பயிற்சி நிலையத்தில் சணல் பை தயாரிப்புக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில், சணல் பை தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் 18 வயது முதல் 45 வயதுடைய இருபாலரும் கலந்து கொள்ளலாம். தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை 14 நாட்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சியுடன் உணவும் இலவசம். ஆர்வம் உள்ளவர்கள் நேரில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 94427 58363 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
