கணவன் இறந்த துக்கம் தாளாமல் போடியில் 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய் உயிரிழப்பு
தேனி மாவட்டம் போடியில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் விஷம் குடித்ததில், தாய் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் போடியில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தனது மகன், மகளுடன் விஷம் குடித்ததில் தாய் உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலச்சொக்கநாதபுரம் தெருவைச் சேர்ந்த ராஜா, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். இதனால் மனவருத்தத்தில் இருந்த அவரது மனைவி காமுத்தாய் (38), நேற்று முன்தினம் மாலையில் மகள் மதுஹாசினி (16), மகன் சீனுஹர்சித் (14) ஆகியோருடன் விஷம் குடித்தார்.
மூவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமுத்தாய் உயிரிழந்தார். போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் விசாரணை நடத்தி வருகிறார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
