தூத்துக்குடியில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து டெல்லியில் 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பேராசிரியை பாத்திமா பாபு, காந்தி, மாரிச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
