தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14 உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலயத்தின் விண்ணேற்பு விழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 22-ம் தேதி வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
