நாலுமாவடியைச் சேர்ந்த பெண் தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அபகரிப்பு புகார் தொடர்பாக குரும்பூர் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் நாலுமாவடியைச் சேர்ந்த பெண் தீக்குளிக்க முயன்றார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு கணவருடன் மனு அளிக்க வந்த நாலுமாவடியைச் சேர்ந்த ராஜலெட்சுமி (46) என்பவர், திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரைத் தடுத்து தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இது குறித்து அவரது கணவர் ராஜன் கூறுகையில், தங்களுக்குச் சொந்தமான நில அபகரிப்பு தொடர்பாக குரும்பூர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால், வேறு வழியின்றி தனது மனைவி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
