எட்டயபுரத்தில் ஆட்டோ மீது கார் மோதி பெண் உயிரிழப்பு
எட்டயபுரம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில், கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் உயிரிழந்தார்.

எட்டயபுரம் அருகே கார் மோதியதில் ஆட்டோவில் பயணித்த பெண் உயிரிழந்தார். கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துராஜனின் மனைவி ராஜராஜேஸ்வரி (60), எட்டயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, ஆட்டோவில் கோவில்பட்டி திரும்பிக்கொண்டிருந்தார்.
ஆட்டோ எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே ராஜராஜேஸ்வரி உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள எட்டயபுரம் போலீஸார், கார் ஓட்டுநர் காளிதாஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
