தென்னிந்திய கபடி போட்டி: சென்னை அணி முதலிடம்
தென்னிந்திய கபடி போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

குளத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி முதலிடம் பிடித்து ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகையைப் பெற்றது. கோவை அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
