எட்டயபுரம் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், எட்டயபுரம் பகுதிகளில் அரசுத் திட்டப் பணிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், எட்டயபுரம் பாரதியார் இல்லம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக, கீழஈரால் பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் பவளம் மகளிர் சுய உதவிக் குழுவினரின் கடலை மிட்டாய் தயாரிக்கும் கூடம் மற்றும் ஆடு வளர்ப்புத் திட்டங்களை அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
