தூத்துக்குடியில் 10 பேர் மீது வழக்கு
தூத்துக்குடியில் பொருட்காட்சி அரங்கு அமைக்கும் போது ஏற்பட்ட தகராறில் திவாகர் உட்பட 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு பொருட்காட்சி அரங்கு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது ஏற்பட்ட தகராறில், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக திவாகர் உள்ளிட்ட 10 பேர் மீது தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
