கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன் மற்றும் மாவட்டத் தலைவர்கள் முன்னிலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் உதவியாளர்களை நியமிக்க வேண்டும், புளூடூத் முனையக் கருவிகளை வழங்க வேண்டும், விடுமுறை நாட்களில் ஆய்வுக்கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். வயது முதிர்வு காரணமாக கைரேகை பதிவு செய்ய முடியாத பயனாளிகளுக்கு மாற்று வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
