விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: நீதிமன்றத்திற்கு உதவ வழக்கறிஞர்கள் குழு அமைப்பு
மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக, நீதிமன்றத்திற்கு உதவ வழக்கறிஞர்கள் குழுவை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.

விளாத்திகுளம் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் தலைமையில் மூன்று பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவில் வழக்கறிஞர்கள் அஜ்மல்கான் மற்றும் ஜெசிமத்துல் பாத்திமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
