சிவாஜி கணேசன் சிலைக்கு மரியாதை
நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி திருச்சியில் அவரது சிலைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி, திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை அருகிலுள்ள அவரது சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையிலும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
