திருஈங்கோய்மலை கோயிலில் திருட்டு முயற்சி
முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலை கோயிலில் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி நடந்துள்ளது. எதுவும் திருடு போகவில்லை.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் மலைக் கோயிலில் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இக்கோயிலில், நேற்று காலை அர்ச்சகர்கள் சென்றபோது கதவுகள், மடப்பள்ளி மற்றும் மூலஸ்தான கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இருப்பினும், கோயிலில் இருந்த பணம் அல்லது நகைகள் திருடு போகவில்லை எனத் தெரிகிறது. இக்கோயிலில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மரகதலிங்க சிலை திருடு போனது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் திருட்டு முயற்சி நடந்திருப்பது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
