அம்மா மண்டபத்தில் கோயில் நிர்வாகம் எல்லைக் கற்கள் ஊன்ற எதிர்ப்பு
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நிலங்களை அளவீடு செய்து எல்லைக் கற்கள் ஊன்றியதற்கு புரோகிதர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகளின் ஒரு பகுதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் ஊன்றப்பட்டன. இதற்கு அப்பகுதியில் பணிபுரியும் புரோகிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அம்மா மண்டபத்தில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவும் 500-க்கும் மேற்பட்ட புரோகிதர்கள், கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனையடுத்து, கோயில் இணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் புரோகிதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
