மாவட்ட கலைப் போட்டிகளில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு
திருச்சி மாவட்ட ஆட்சியர் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலைப் போட்டிகள் ஜூலை 25-ம் தேதி காலை 9 மணிக்கு பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய பிரிவுகளில் 5-8, 9-12 மற்றும் 13-16 வயது பிரிவினருக்கு போட்டிகள் நடைபெறும். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும், பங்கேற்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
