திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: போட்டியிடுவது குறித்து சகாயம் ஐஏஎஸ் விளக்கம்

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து பரவும் தகவல்களுக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பதிலளித்துள்ளார். தான் எந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பது முக்கியமல்ல, மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதே முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதியில், தவெக சார்பில் போட்டியிடுபவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ராகவா லாரன்ஸ் போட்டியிட வாய்ப்பில்லை என அறிவித்துள்ள நிலையில், சகாயம் அல்லது ஜான் ஆரோக்கியசாமி பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
செய்தி மூலம்: OneIndia Tamil - Latest
