முக்கொம்பில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
காவிரி நீர் திறக்க வலியுறுத்தி முக்கொம்பு மேலணையில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் நீர் திறக்கக் கோரி, தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி முக்கொம்பு மேலணையில் காவிரி ஆற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 53 டிஎம்சி நீரைத் திறக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
தமிழக விளைநிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் தரிசாக மாறுவதாகவும், இதனால் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். எனவே காவிரி நீரைப் பெற்றுத் தர தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
