மணப்பாறையில் பொடாரன் ஃபுட்ஸ் புதிய ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

மணப்பாறை சிப்காட் (SIPCOT) உணவுப் பூங்காவில் அமையவுள்ள பொடாரன் ஃபுட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய ஆலைக்கான அடிக்கல்லை முதலமைச்சர் நாட்டினார். சுமார் 14.5 ஏக்கர் பரப்பளவில் 185 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் 1,085 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
