திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் அறிமுகம்
திருச்சி அப்போலோ மருத்துவமனையில் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைகளைத் துல்லியமாக மேற்கொள்ள நியூரோ நேவிகேஷன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அதிநவீன நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட பெர்ஃப்யூஷன் தொழில்நுட்பம் கொண்ட கமாண்ட் சென்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை மருத்துவமனை தலைவர் ஜெயராமன் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய தொழில்நுட்பம் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைகளின் போது, சரியான பாதை மற்றும் ஆழத்தை துல்லியமாக கணித்து வழிகாட்டுகிறது. ஜிபிஎஸ் போன்று செயல்படும் இந்த அமைப்பு, நோயாளியின் முந்தைய சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் படங்களுடன் உண்மையான உடலமைப்பை ஒருங்கிணைத்து, அறுவை சிகிச்சையின் போது பாதிப்புகளைக் குறைத்து நோயாளி விரைவாகக் குணமடைய உதவுகிறது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
