திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து, அந்த முகாமை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த முகாமை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சிறப்பு முகாமில் உள்ளவர்களின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்லத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
