எப்.கீழையூர் காலனி என்ற பெயரை நீக்கக் கோரி சாலை மறியல்
மணப்பாறையை அடுத்த எப்.கீழையூரில் 'காலனி' என்ற பெயரை நீக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் பகுதியில் உள்ள 'காலனி' என்ற பெயரை நீக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஊராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பலகைகளில் ஊர் பெயர் மாற்றப்படாமல் இருப்பதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது. மணப்பாறை போலீஸார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
