கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தினர் தங்களின் 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் காமராஜ் மற்றும் பிற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
