சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை
திருநெல்வேலி மாநகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் மற்றும் தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, அவற்றை விரைந்து சீரமைக்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மேலும், மாநகரத்தில் இயக்கப்படும் சில தனியார் பேருந்துகள் அதிவேகமாகவும், அலட்சியமாகவும் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அவற்றின் மீது போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
