முண்டந்துறை வனப்பகுதியில் கரடி உயிரிழப்பு
முண்டந்துறை வனப்பகுதியில் வயது முதிர்வினால் பெண் கரடி உயிரிழந்தது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தைலாத்து ஓடை பீட் ஆற்றுப்பகுதியில் கரடி ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனக்கால்நடை மருத்துவ அலுவலர் முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இறந்த கரடியானது 14 வயது மதிக்கத்தக்க பெண் கரடி என்றும், வயது முதிர்வினால் இறந்துள்ளதாகவும் வனக்கால்நடை மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
