பாளையங்கோட்டையில் ஹாக்கி போட்டி
பாளையங்கோட்டையில் ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் 14 பள்ளிகளைச் சேர்ந்த 720 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

திருநெல்வேலியில் ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சார்பில் கருவேலம்-ராஜாத்தி நினைவு 4-வது ஆண்டு ஹாக்கி போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.
இந்த போட்டிகளில் 14 பள்ளிகளைச் சேர்ந்த 720 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் பங்கேற்பு கேடயங்கள் வழங்கப்பட்டன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
