ETN News சமீபத்திய அப்டேட்கள்
Tirunelveli · district

நெல்லையில் எஸ்ஆர்எம்யூ ஆர்ப்பாட்டம்

ரயில்வே ஊழியர் ஒருவரின் தரக்குறைவான பேச்சைக் கண்டித்து திருநெல்வேலியில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லையில் எஸ்ஆர்எம்யூ ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே தொழிலாளர் யூனியனைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் மற்ற ஊழியர்களைத் தரக்குறைவாகப் பேசியதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் திருநெல்வேலி கிளை பொறுப்பாளர் சுப்பையா தலைமை வகித்தார். திருநெல்வேலி கிளைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். செயலர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்