இஸ்கான் பாதயாத்திரைக்கு திருநெல்வேலியில் வரவேற்பு
திருநெல்வேலிக்கு வந்தடைந்த அகில இந்திய இஸ்கான் பாதயாத்திரைக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அகில இந்திய பாதயாத்திரை திருநெல்வேலியை வந்தடைந்தது. இஸ்கான் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் கிருஷண பபலராமர் மற்றும் நிதாய் கவுரசுந்தர் திருவுருவங்கள் அலங்கரிக்கப்பட்ட பாரம்பரிய காளை வண்டியில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆரத்தி எடுத்து மலர் தூவி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி இஸ்கான் துணைத் தலைவர் கருணாசிந்து கிருஷண தாஸ் பிரபு மஹா ஆரத்தி காண்பித்து வரவேற்றார். பாதயாத்திரை அமைப்பின் பொறுப்பாளர் ஆச்சார்யர்ய தாஸ் பிரபு பேசுகையில், '1984-ல் தொடங்கிய இந்த ஆன்மிக பாதயாத்திரை இதுவரை 1.80 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளது. உலக சகோதரத்துவம் மற்றும் போதை இல்லாத சமூகத்தை வலியுறுத்தி இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது' என்றார்.
இந்த யாத்திரை திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் 7 நாட்கள் தங்க உள்ளது. இந்த நாட்களில் தினமும் காலை 4.30 மணி, 7.15 மணி மற்றும் இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
