சங்கரன்கோவில் திருவிழா பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமரா வழங்கிய மக்கள்
சங்கரன்கோவில் திருவிழாவையொட்டி பொதுமக்கள் காவல்துறையினருக்கு கண்காணிப்பு கேமராக்களை வழங்கினர்.

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசு விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விழா பாதுகாப்பு கருதி, சங்கரன்கோவில் காந்திநகர் மற்றும் பொட்டல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல்துறை மூலம் கண்காணிப்பு கேமராக்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர். இச்செயல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
