நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மருந்து பாட்டில்களுடன் வந்த விவசாயியால் பரபரப்பு
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு மருந்து பாட்டில்கள் மற்றும் கயிறுடன் வந்த விவசாயியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றபோது, விவசாயி ஒருவர் மருந்து பாட்டில்கள் மற்றும் கயிறுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் அவரைச் சோதனையிட்டபோது, அவர் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை (55) என்பதும், விவசாயம் செய்து வருவதும் தெரியவந்தது. பட்டா தொடர்பான பணி காரணமாக வந்ததாகத் தெரிவித்த அவர், பணியை முடித்த பிறகு தான் கொண்டு வந்த பொருட்களை மீண்டும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
