ETN News சமீபத்திய அப்டேட்கள்
Kallidaikurichi · crime

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த ஓட்டுநர் மணிகண்டனை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (21). இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். முக்கூடல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அந்த சிறுமியை அழைத்துச் சென்ற மணிகண்டனை, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தேடி கண்டுபிடித்தனர். விசாரணையில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் மீது போக்சோ சட்டம் மற்றும் கடத்தல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்