நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியில் சுற்றித் திரியும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா உத்தரவின் பேரில் நடைபெற்றன.
தச்சநல்லூர் மண்டலத்தில் 41 நாய்களுக்கும், திருநெல்வேலி மண்டலத்தில் 25 நாய்களுக்கும், பாளையங்கோட்டை மண்டலத்தில் 101 நாய்களுக்கும், மேலப்பாளையம் மண்டலத்தில் 12 நாய்களுக்கும் என பல்வேறு பகுதிகளில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மாநகராட்சி கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து இந்த முகாம்கள் நடத்தப்பட்டன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
