தெற்கு கள்ளிகுளம் பனிமாதா ஆலய பெருவிழா ஜூலை 27-ல் தொடக்கம்
தெற்கு கள்ளிகுளம் பனிமாதா ஆலயத்தின் 141-வது ஆண்டுப் பெருவிழா ஜூலை 27-ல் தொடங்கி ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள அதிசய பனிமாதா பேராலயத்தின் 141-வது ஆண்டுப் பெருவிழா ஜூலை 27-ம் தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் சிறப்புத் திருப்பலிகள், மறையுரைகள் மற்றும் நற்கருணை ஆராதனைகள் நடைபெற உள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்ப்பவனி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
