ETN News சமீபத்திய அப்டேட்கள்
Tirupattur · agriculture

திருப்பத்தூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் போதிய மழையின்மையால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் மனு அளித்தனர்.

திருப்பத்தூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், போதிய மழையின்மையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி மனு அளித்தனர்.

மேலும், வாணியம்பாடி முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இக்கூட்டத்தில் ஆட்சியர் ரவிக்குமார் முன்னிலையில் 595 மனுக்கள் பெறப்பட்டன.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்