ETN News சமீபத்திய அப்டேட்கள்
Vaniyambadi · crime

கோயில் நகை திருப்பி தராதவர்கள் மீது புகார்

வாணியம்பாடி அம்மன் கோயில் நகையை பெற்று திருப்பி தராத 3 பேர் மீது கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயில் நகை திருப்பி தராதவர்கள் மீது புகார்

வாணியம்பாடி அருகே உள்ள அம்மன் கோயிலுக்கு சொந்தமான 510 கிராம் தங்க நகைகளை, அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் மூன்று மாத கால அவகாசத்தில் திருப்பி வழங்குவதாகக் கூறி பெற்றுச் சென்றனர்.

18 மாதங்கள் கடந்தும் நகையை திருப்பி தராததால், கோயில் நிர்வாகத்தினர் நகையை கேட்டபோது அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி காவல்துறையினர் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்